'புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் ஒரு மாயையை உருவாக்கியுள்ளன' என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். 'பொய்த் தகவல்கள் - உண்மைத் தகவல்கள்' என்று பட்டியலிட்டுள்ள அவர், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துபூர்வ உத்தரவாதம் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் சில வாக்குறுதிகளையும் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 24 நாள்களை எட்டியுள்ள இந்தப் பேராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு பல வழிகளில் முயன்று வருகிறது.
இதற்கிடையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், தான் வேளாண் குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய சங்கங்கள் இடையே, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டே வளர்ந்திருக்கிறேன். தவறான நேரத்தில் வரும் மழையின் துயரத்தையும், சரியான நேரத்தில் வரும் பருவமழையின் மகிழ்ச்சியையும் நான் கண்டிருக்கிறேன். பயிர்களை விற்க வாரம் முழுவதும் காத்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் இணைத்துள்ள 'பொய்த் தகவல் - உண்மைத் தகவல்' ஹைலைட் இது...
அந்தக் கடித்தில் அவர் மேலும் கூறியது:
"நாட்டின் விவசாய அமைச்சராக, விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமையாகும். விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமை.
குறைந்த பட்ச ஆதார விலைத் தொடரும். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலத்திற்கு பாதிப்பு வராது. பயிர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும் நிலத்திற்கு அல்ல. விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம். ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தை ஏற்கெனவே பல மாநிலங்கள் அறிமுகம் செய்துவிட்டன. பல மாநிலங்களில் ஒப்பந்த விவசாயத்திற்கு சட்டங்கள் உள்ளன.
விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அப்பாவி விவசாயிகளை அரசியல் பொம்மைகளாக ஆக்கிவிட சிலர் முயற்சி செய்கிறார்கள். விளைபொருட்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்ற நிலையில் விளைநிலம் எப்படி பறிபோகும்?
நிலம் விவசாயிக்குத் தான் சொந்தம் என்று புதிய சட்டம் தெளிவாகக் கூறுகிறது. எண்ணத்தாலும் கொள்கையாலும் விவசாயிகளின் நலனில் எங்கள் அரசு அக்கறை கொண்டுள்ளது.'' - இவ்வாறு அந்தக் கடிதத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
முழு கடிதத்துக்கான இணைப்பு > விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சரின் கடிதம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்