Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் அவுட்: இந்திய அணி 'மோசமான' சாதனை!

https://ift.tt/34rJu46

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் ஓர் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே ரன்கள் எடுத்து அவுட்டாவது அரிதினும் அரிதான நிகழ்வு. இந்த மோசமான சாதனையை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் படைத்துள்ளது இந்திய அணி. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெறும் 128 பந்துகள் மட்டுமே ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதில் மூன்று டக் அவுட்டும் அடங்கும். 

இந்திய அணிக்காக அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோலி உட்பட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அதற்கும் கீழ் தான் ரன்கள் எடுத்துள்ளனர். இதற்கு முன்னர் டெஸ்ட்கிரிக்கெட் வரலாற்றிலேயே கடந்த 1924-இல் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதிய டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. அந்த இன்னிங்ஸில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் விக்கெட்டை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்து இந்தியா இந்த மோசமான டெஸ்ட் வரலாற்று சாதனையை இப்போது படைத்துள்ளது. அதோடு ஓர் இன்னிங்ஸில் ஓர் அணி எடுத்துள்ள  குறைந்தபட்ச ரன்களின் வரிசையிலும் இந்தியா (36 ரன்கள்) இந்தப் போட்டியின் மூலம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்