ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். 16 ஆட்டங்கள் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். துல்லிய யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களையே திணறடித்தார். ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் இந்தியா -ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியின் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கான்பெர்ராவில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2Vny38j

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்