எதிர்பார்ப்புகளை எகிற வைத்த Vivo V20 Pro 5G இந்தியாவில் அறிமுகமானது.
Vivo V20 Pro 5G மாடலானது Vivo V20 மற்றும் Vivo V20 SE வரிசையில் வெளியாகும் அடுத்த போனாகும். Qualcomm Snapdragon 765G புராசெஸ்சர், 3 வகையான பின்பக்க கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா என பல அசத்தல் வசதிகளுடன் இந்த போன் ரிலீஸ் ஆகியுள்ளது. இது தாய்லாந்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் இந்தியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் Vivo V20 Pro 5G விலையானது ரூ.29,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 8GB RAM + 128GB என்ற மெமரி அளவைக் கொண்டது. இந்த போன் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் ஆகிய இணையதளங்களில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்யப்பட்டால் ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமின்றி செல்போன் விற்பனை கடைகளிலும் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vivo V20 Pro 5G போனானது இரண்டு சிம் போடும் வசதி கொண்டது. 6.44 இஞ்ச் அளவுகொண்ட டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. ஏற்கெனவே கூறியதுபோல இது Qualcomm Snapdragon 765G புராசெஸ்சர் கொண்டதாக உள்ளது. பின்பக்கம், 64 மெகா பிக்ஸல் + 8மெகா பிக்ஸல்+2 மெகா பிக்ஸல் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளன.
முன்பக்கத்தை பொருத்தவரை செல்ஃபிக்காக 44 மெகா பிக்ஸல்+8 மெகா பிக்ஸல் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. 8GB மற்றும் 128GB மெமரி கொண்ட போன் மாடலாக இது உள்ளது. இதனால் கேமிங் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை 4000mAh ஆக உள்ளது. 1080x2400 pixels ரிசலோசன் மற்றும் Android 11 OS கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord செல்போனுக்கு நேரடி போட்டியாக அறிவிக்கப்பட்ட Vivo V20 Pro 5G பெரிய எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடலின் சாதக, பாதங்கள் என்ன? பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Source:gadgets.ndtv
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்