மணக்கோலத்தில் கையில் எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் ஆர்யா நிற்கும் ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா துறையினரை வாழவைப்பது மக்கள்தான். அத்தகைய, கலையும் மக்களுக்கானதாகவே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். 'அட்டக்கத்தி'யில் தொடங்கிய மக்களுக்கான அவரின் கலைப்பயணம் 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' தற்போது 'சார்பட்டா பரம்பரை' வரை தொடர்கிறது. நான்கே படங்கள் இயக்கி இருந்தாலும், அதன் அரசியல் வீச்சு என்பது மிகப்பெரிய தாக்கத்தையும் கலகத்தையும் விவாதத்தையும் சமூகத்தில் உண்டாக்கியது என்பது தீவிர சினிமா ஆர்வலர்களின் பார்வை.
தனது படங்களில் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார் என சமூக சிந்தனையோடு போராடிய தலைவர்களை காட்டி அவர்களுக்கு இன்னும் புகழ் சேர்ப்பார் என்பதும் பா.ரஞ்சித் குறித்து முன்வைக்கப்படும் பார்வை.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கையில் எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் திருமணக் கோலத்தில் ஆர்யா நிற்கும் புகைப்படம் பெரும் வைரல் ஆகி வருகின்றது.
ரஞ்சித் படம் எப்போது வெளியானாலும் 'ஏன் இந்தத் தலைவரின் படத்தை வைக்கவில்லை?', 'ஏன் எங்கள் தலைவரை விட்டுவிட்டீர்கள்?' என்று விவாதங்களே நடக்கும். இந்நிலையில், எம்.ஜி.ஆர் காட்டப்பட்டிருப்பதால் என்ன எதிர்வினைகள் என்பது இனிமேல்தான் தெரியும். தீவிர திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரான இயக்குநர் பா.ரஞ்சித் பட்டியலின மக்களின் விடுதலை அரசியலையும், பெண்ணிய சிந்தனைகளையும் தனது படங்களில் தொடர்ந்து பேசிவருபவர்.
குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஆர்யாவின் 30-வது படம். 'காலா'வுக்குப் பிறகு பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆங்கிலேயர்களிடமிருந்தும் உள்ளூர் நில உடமையாளர்களிடமிருந்தும் மீட்டுத்தர போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பா.ரஞ்சித் அறிவிப்பும் வெளியிட்டு, பின்பு இடையில் நின்று போனது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆர்யா - கலையரசன் நடிப்பில் ‘ஆர்யா 30’ படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருகேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.நேற்றுதான், இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்லுக் போஸ்டரும் வெளியாக சமூக வலைதளங்கள் முழுக்க நிரம்பி வழிந்தது.
நடிகர் சூர்யா, கார்த்தி, விஷ்னு விஷால், இயக்குநர் ராம்குமார், தயா அழகிரி, சி.வி குமார், வெங்கட் பிரபு என பலரும் போஸ்டரை பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. பாடலாசிரியர் கபிலனும் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது பாடல் காட்டிகளின்போது என்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்