தொடர் கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழுமையான புகைப்படத் தொகுப்பு இதோ...
வலுவிழந்த புரெவி புயல் நீண்டநேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் சிதம்பரம் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் தாலுகாவில் மட்டும் 34 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்து பெய்யும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணியும் நடந்து வருவதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கோயிலுக்குள் வந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் கோயில் நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mHWHN3தொடர் கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழுமையான புகைப்படத் தொகுப்பு இதோ...
வலுவிழந்த புரெவி புயல் நீண்டநேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் சிதம்பரம் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் தாலுகாவில் மட்டும் 34 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்து பெய்யும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணியும் நடந்து வருவதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கோயிலுக்குள் வந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் கோயில் நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்