கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ்-டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், காணொளியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அமித் ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவது, யாருக்கெல்லாம் போடுவது, ஒவ்வொரு மாநிலத்திலும் முன்களப்பணியாளர்களுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படுவது, கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், எதிர்கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/33HX3vwகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ்-டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், காணொளியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அமித் ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவது, யாருக்கெல்லாம் போடுவது, ஒவ்வொரு மாநிலத்திலும் முன்களப்பணியாளர்களுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படுவது, கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், எதிர்கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்