மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவைப்போம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை குழப்பி தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் 4 டிகிரி என்ற குறைந்தபட்ச வெப்பநிலை உள்ள சூழலில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது. எல்லை பகுதியான சிங்கு, திக்ரி, காஜிப்பூரில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியையும் நொய்டாவையும் இணைக்கும் சில்லா எல்லையை இன்று முற்றிலும் மறைக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய பிரதிநிதிகள், ''வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என அரசு சொல்கிறது. ஆனால் நாங்கள் அரசை செய்ய வைக்கப்போகிறோம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு வரும் 20ஆம் தேதி நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தவேண்டும்'' என்றனர்.
இதற்கிடையில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுக்காத பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார். வேளாண் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய தனியாக சட்டம் இயற்றப்படவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு நிர்வாக முடிவு என்றும் அது அப்படியே தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உண்மையான விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தோமர் கூறினார்.
இதற்கிடையே, குஜராத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. வேளாண் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் நீண்ட ஆண்டுகளாக முன்வைத்து வரும் கோரிக்கை அடிப்படையிலேயே வேளாண் துறையில் தற்போது சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டி வருகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான அவர்களது சந்தேகங்களை தீர்க்க 24 மணி நேரமும் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாக இருந்தபோது ஆதரித்து விட்டு, தற்போது சீர்திருத்தம் மேற்கொண்டதும் எதிர்க்கின்றன. வேளாண் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்திருக்கிறது'' என்று பேசினார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்