Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மலையாளத்தின் ‘முக்கத்தே பெண்ணே‘ பாடலை மீளுருவாக்கம் செய்த திவ்ய தர்ஷினி!

https://ift.tt/386bAmg

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ’என்னு நிண்டே மொய்தீன்’ படத்தின் ’முக்கத்தே பெண்ணே’ பாடலை நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி மீளுருவாக்கம் செய்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது ‘என்னு நிண்டே மொய்தீன்’. பிரித்விராஜ், பார்வதி நடிப்பில் வரவேற்பை பெற்று பல்வேறு விருதுகளையும் குவித்தது. இப்படத்தில் இடம்பெற்ற ’முக்கத்தே பெண்ணே’ பாடல் இப்போதும் பலரின் காலர் டியூன்களாக இருக்கின்றன என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அப்பாடலை மீண்டும் இயக்கி மீளுருவாக்கம் செய்துள்ளார் திவ்ய தர்ஷினி.

image

இதுகுறித்து, திவ்ய தர்ஷினி பேசும்போது,

“ ‘முக்கத்தே பெண்ணே‘ மிக முக்கியமான பாடல் . கேட்பவர்களின் மனதை உருக்கி அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் பாடல். அப்பாடலை தீவிரமாக ரசிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. அப்பாடலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன். வெகு இயல்பாக காதலை, சந்தோஷத்தை, பிரிவை நம்முள் உலவ விடும். இப்பட பாடலுக்கும் மேலும் இப்படத்திற்கும் மிகத்தீவிரமான ரசிகை.

image

இப்படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிரித்விராஜ், பார்வதி நடிப்பை வெகுவாக ரசித்தேன். என்னுடன் இணைந்து நடித்த கிரிஷ் மிகச்சிறப்பான பணியினை செய்திருந்தார். ரசிகர்கள் எனது இந்த சிறு முயற்சியை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

ஒரிஜினல்  பாடலில்  உண்மையான மேஜிக்கை கொண்டுவந்த பிரித்விராஜ், பார்வதி, கோபி சுந்தர் மற்றும் இயக்குநர் V.S.விமல் ஆகியோர், மில்லியனுக்கும் மேற்பட்ட  ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை தந்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி. சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரியா ஜீனா ஜான்சன் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.  இந்த யோசனையை நான் சாதாரணமாகப் பகிர்ந்தபோது, அவர் உடனடியாக ஊக்கப்படுத்தினார் மற்றும் பாடல் பதிவுக்கு எனக்கு உதவி ஊக்குவித்தார்” என்றார்.

திவ்ய தர்ஷினி இப்பாடலின் வடிவத்தை உருவாக்கி  இயக்கியுள்ளார். இப்பாடலை  பாடியுள்ளார் நிகில் மேத்யூ. நடிகர் சிவகார்த்திகேயேன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்