ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்களை முன்னெடுப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும். மக்கள் நீதி மய்யம் தேர்தலில் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி சறுக்கும்போது மேலே தூக்கி வைக்கப்பட்டவர் வறுமைகோட்டுக்கு கீழே தான் செல்வார். செழுமைக்கோட்டுக்கு மேலே தூக்கிவைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலேயே நிற்பார்.
பல இடங்களில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நேர்மையான கொள்கைகளை எடுத்துவைத்துதான் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல்” என்றார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன முறைகள் கடைபிடிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, “இணைய பாதுகாப்பில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக இருக்கிறது. இண்டெர்நெட் மக்களின் அடிப்படை உரிமையாக இருக்கும். ஊழலை வருமுன்னே கண்காணித்து தடுக்கும். வருமுன்கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம். மக்கள் அரசை கேள்வி கேட்கும் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்