டெல்லி போராடும் விவசாயிகளுக்கான ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் இந்தப் போராட்டம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. போராட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கள நிலவரங்களை சமூக வலைத்தளமான மூலமாக ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக பகிர்வது வழக்கம். சுமார் 1.40 லட்சத்திற்கு மேலானவர்கள் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் திடீரென முடங்கியது. இது தொடர்பாக பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தடங்கலுக்கு வருந்துவதாகவும், அந்தப் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், எதனால் அந்தப் பக்கம் முடக்கப்பட்டது என்பதற்கு ஃபேஸ்புக் பதில் கொடுக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவும், போலி செய்திகளை தவிப்பதற்காகவும் அண்மையில் கிசான் ஏக்தா மோர்ச்சா தொடங்கப்பட்டது. ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னேப்சேட், யூடியூப் என பல தளங்களில் இது இயங்குகிறது. இதற்காக தன்னார்வலர்கள் 24X7 இயங்கி வருகின்றனர்.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 26-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2KIxiESடெல்லி போராடும் விவசாயிகளுக்கான ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் இந்தப் போராட்டம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. போராட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கள நிலவரங்களை சமூக வலைத்தளமான மூலமாக ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக பகிர்வது வழக்கம். சுமார் 1.40 லட்சத்திற்கு மேலானவர்கள் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் திடீரென முடங்கியது. இது தொடர்பாக பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தடங்கலுக்கு வருந்துவதாகவும், அந்தப் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், எதனால் அந்தப் பக்கம் முடக்கப்பட்டது என்பதற்கு ஃபேஸ்புக் பதில் கொடுக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவும், போலி செய்திகளை தவிப்பதற்காகவும் அண்மையில் கிசான் ஏக்தா மோர்ச்சா தொடங்கப்பட்டது. ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னேப்சேட், யூடியூப் என பல தளங்களில் இது இயங்குகிறது. இதற்காக தன்னார்வலர்கள் 24X7 இயங்கி வருகின்றனர்.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 26-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்