விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய பாதிரியார் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருத்வாரா சீக்கிய பாதிரியாராக இருந்தவர் பாபா ராம் சிங். 65 வயதான இவர், டெல்லி-சோனிபட் எல்லை குண்ட்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து பாபா ராம் சிங் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், "அரசாங்கத்தின் அநீதிக்கு எதிராக கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்த எனது உயிரைத் தியாகம் செய்கிறேன்” குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “விவசாயிகள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த போராடும் வேதனையை நான் உணர்கிறேன். அரசாங்கம் அவர்களுக்கு நீதி வழங்காததால் அவர்களின் வலியை நான் பகிர்ந்துகொள்கிறேன். அநீதியைச் செய்வது ஒரு பாவம், ஆனால் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும் ஒரு பாவம். விவசாயிகளுக்கு ஆதரவாக, சிலர் தங்கள் விருதுகளை அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர். நான் என்னையே தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சோனிபட்டின் துணை போலீஸ் கமிஷனர் ஷியாம் லால் பூனியா கூறுகையில், “பாபா ராம் சிங் காருக்குள் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவர் பானிபட்டில் உள்ள பார்க் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை கர்னாலில் நடைபெறும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ராகுல்காந்தி, அமரீந்தர் சிங், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பாதிரியார் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து ஹரியானா அரசு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “குண்ட்லி எல்லையில் விவசாயிகளின் நிலை குறித்து கர்னாலைச் சேர்ந்த சாந்த் பாபா ராம் சிங் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பல விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். மோடி அரசின் கொடுமை அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2KvzcITவிவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய பாதிரியார் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்