உச்ச நீதிமன்ற விசாரணை, சிங்கு எல்லையில் சீக்கிய மதபோதகர் தற்கொலை, போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கிடையே டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 22-வது நாளாக தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்றுமாறு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் மீண்டும் இன்று விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில், உச்ச நீதிமன்றம் விவசாயிகளுடனான அரசின் பேச்சுவார்த்தைகள் "முறையாக செயல்படவில்லை" என்று கூறியதுடன், பேச்சுவார்த்தைகள் செயல்பட அரசு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
உழவர் குழுக்கள், அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழுவை உருவாக்குவது குறித்தும் ஆலோசனையை தெரிவித்தது. இருப்பினும் உழவர் குழுக்கள் இந்த ஆலோசனையில் மகிழ்ச்சியடையவில்லை. உழவர் போராட்டத்திற்கு எதிரான மனுக்கள் குறித்த இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தீர்க்கப்படாவிட்டால் விவசாயிகளின் போராட்டம் விரைவில் ஒரு தேசிய பிரச்சினையாக மாறக்கூடும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு உழவர் குழுக்கள் அதிருப்தி:
மூன்று வேளாண் சட்டங்களின் சிக்கல்களை தீர்க்க, உச்ச நீதிமன்ற ஆலோசனைப்படி புதிய குழுவை அமைப்பது ஒரு தீர்வாகாது, இச்சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தால் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பே அரசு, விவசாயிகள் மற்றும் பிற குழுக்களை அமைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள 40 உழவர் சங்கங்களில் ஒன்றான ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சபையின் தலைவரான அபிமன்யு கோஹர், இதுபோன்ற ஒரு குழுவை அமைக்கலாம் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவை ஏற்கெனவே தாங்கள் நிராகரித்ததாகக் கூறினார். திக்ரி எல்லையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), ஒரு புதிய குழு அமைப்பதால் எந்த பயனும் இருக்காது என்று கூறியது.
போராட்டக்களத்தில் தற்கொலை செய்துகொண்ட சீக்கிய மதபோதகர்:
சீக்கிய போதகர் ஒருவர் நேற்று சிங்கு எல்லை போராட்டக்களத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னால் விவசாயிகளின் வலியைத் தாங்க முடியவில்லை என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.
கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியில் உள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்த சாந்த் ராம் சிங் (65) அந்த சீக்கிய போதகர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக, சோனிபட் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்கொலை செய்துகொண்ட சீக்கிய போதகரின் இறுதி சடங்குகள் டிசம்பர் 18 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல் > “என் தியாகம் இதுதான்!” - விவசாயிகள் போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சீக்கிய பாதிரியார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nEpmTyஉச்ச நீதிமன்ற விசாரணை, சிங்கு எல்லையில் சீக்கிய மதபோதகர் தற்கொலை, போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கிடையே டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 22-வது நாளாக தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்