உடற்தகுதி சோதனையில் வெற்றியடைந்த இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்போது இடதுகால் தொடையில் காயமடைந்த இந்திய வீரர் ரோகித் சர்மா உடல்தகுதி சோதனையில் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து இன்று ஆஸ்திரேலியா புறப்படும் அவர் அங்கு கொரோனா தடுப்புக்காக 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்வார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட்டில் மட்டுமே ரோகித் சர்மாவால் கலந்துக்கொள்ள முடியும்.
இது குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் "ரோகித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சி முறைகளை நிறைவு செய்து, இப்போது மருத்துவ ரீதியாக தகுதியுடன் இருக்கிறார். இதில் அவரது பேட்டிங், பீல்டிங், ரன் எடுக்க வேகமாக ஓடுவது ஆகிய திறனை சோதித்த கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு அவரது உடல்தகுதியில் திருப்தி அடைந்துள்ளது"
"இருப்பினும் கடினமான சூழலில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவதில் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவர் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் 14 நாள் தனிமைப்படுத்துதலின்போது என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்ததும் இந்திய அணியின் மருத்துவ குழு அவரது உடல்தகுதியை மறுஆய்வு செய்யும். அதன் அடிப்படையிலேயே அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்