ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரரை களமிறக்கலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அதேசமயம் டி20 தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் கோலி, அதற்கடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார். அனுஷ்கா சர்மா - கோலி தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்புகிறார்.

இது குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சுனில் கவாஸ்கர் "கோலி ஒரு டெஸ்ட்டில்தான் விளையாடுகிறார். அதன் பின்பு ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்துவார். ஆனால் கோலியின் 4-ஆம் இடத்தில் களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது. கோலி இல்லாத இடத்தில் எனக்கு தெரிந்து ரஹானே களமிறங்குவார் என நினைக்கிறேன். அப்போது ரஹானே இடத்தில் கே.எல்.ராகுலோ அல்லது சுப்மன் கில் ஆகியோரை களமிறக்கினால் சரியாக இருக்கும்" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2W7uO5h

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்