ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.
முதல்கட்டமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று, அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிபர் புடின் புதன்கிழமை உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, மாஸ்கோவில் 70 கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து பொது மக்களுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். உலகில் பல்வேறு நாடுகளில் சோதிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அங்கீகாரம் முதல்முறையாக ஸ்புட்னிக்-5 மருந்துக்குத்தான் அளிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்