“மக்களுக்காக நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைய தயாராக உள்ளோம்” என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக்கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத்தொடங்கி விட்டனர். அதன்படி படி மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ம் தேதி முதல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்று கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ரஜினியின் அரசியல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நானும் ரஜினியும் இன்னுமும் நட்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அரசியலில் அவரது பயணமும் எனது பயணமும் ஒன்றுதான். ஆனால் அவர் கொள்கை என்ன என்று முழுமையாக சொல்லவில்லை. அதனால் அவரது கொள்கையை சொல்லட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றினைய தயாராக உள்ளோம்” என்றார்.
அதனை தொடர்ந்து, ‘எம்.ஜி.ஆருக்கு நீட்சி என்று கூறினீர்கள். ஆனால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “அதிமுகவுக்கு நீட்சி என்று நான் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு நீட்சி என்றுதான் கூறினேன். எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது அவரை திமுகவின் திலகம் என்று கூறவில்லை. அதிமுகவை தொடங்கிய போதும் அவரை அதிமுகவின் திலகம் என்று கூறவில்லை. அவர் எப்போது மக்கள் திலகமாகவே இருந்தார். அதன்படி நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது” என பதில் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்