அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் மோடி சார்பில் இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் அதனை பெற்றுக் கொண்டதாகவும் ஓ’பிரையான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nKOoRaஅமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் மோடி சார்பில் இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் அதனை பெற்றுக் கொண்டதாகவும் ஓ’பிரையான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்