மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை குறித்த விவரங்களை தரும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது வாரிசு என அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் அல்லது நிர்வாகியை நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் (2020) கடந்த மே மாதம் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு இருவருக்கும் நிர்வாக உரிமையை மறுத்ததுடன், நிர்வாகியை நியமிக்கவும் மறுத்துவிட்டனர். அதேசமயம் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை வாரிசுகளாக அறிவித்தது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கவும் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதன்பின்னர், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக அதை கையகப்படுத்திய தமிழக அரசின் முடிவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நிலம் கையகப்படுத்தியதற்கான தொகை 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாயை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அரசு செலுத்தியதுடன், அதை வருமானவரி நிலுவை 36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 ரூபாய் போக, மீதத்தொகையை தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க வழிவகை செய்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை குறித்த விவரங்களை தரும்படி வருமான வரித்துறையிடம் தீபக் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் வருமான வரித்துறையினர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தான் கேட்கும் ஜெயலலிதாவின் வரி நிலுவை விவரங்களை தர வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபக் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு உள்ளதா என்று முடிவு செய்வதற்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், நடைமுறைகளை முடித்து வழக்கை பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது இந்த வழக்கை நாளை (டிசம்பர் 23) விசாரிக்க வேண்டும் என தீபக் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பதிவுத்துறை தான் முடிவெடுக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mO00ljமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை குறித்த விவரங்களை தரும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது வாரிசு என அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் அல்லது நிர்வாகியை நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் (2020) கடந்த மே மாதம் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு இருவருக்கும் நிர்வாக உரிமையை மறுத்ததுடன், நிர்வாகியை நியமிக்கவும் மறுத்துவிட்டனர். அதேசமயம் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை வாரிசுகளாக அறிவித்தது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கவும் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதன்பின்னர், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக அதை கையகப்படுத்திய தமிழக அரசின் முடிவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நிலம் கையகப்படுத்தியதற்கான தொகை 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாயை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அரசு செலுத்தியதுடன், அதை வருமானவரி நிலுவை 36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 ரூபாய் போக, மீதத்தொகையை தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க வழிவகை செய்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை குறித்த விவரங்களை தரும்படி வருமான வரித்துறையிடம் தீபக் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் வருமான வரித்துறையினர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தான் கேட்கும் ஜெயலலிதாவின் வரி நிலுவை விவரங்களை தர வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபக் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு உள்ளதா என்று முடிவு செய்வதற்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், நடைமுறைகளை முடித்து வழக்கை பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது இந்த வழக்கை நாளை (டிசம்பர் 23) விசாரிக்க வேண்டும் என தீபக் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பதிவுத்துறை தான் முடிவெடுக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்