ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு இயந்திர துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டின் ராணுவ கமாண்டர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் அருகே கடந்த மாதம் 27ம் தேதி விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே துப்பாக்கியால் சுடப்பட்டும், கார்குண்டு மூலமும் கொலை செய்யப்பட்டார். இதன்பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி பதாவி கூறுகையில், “அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே கொலைக்கு செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், தொலைவிலிருந்து ஜூம் செய்யப்பட்டு, பிறகு செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அமைப்பை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், காரில் இருந்த விஞ்ஞானியின் முகத்தை மட்டும் மிகவும் பெரிதாகப் படம் பிடித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் அவர் மீது 13 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். விஞ்ஞானியின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி மீது ஒரு குண்டு கூட படவில்லை எனக் கூறிய துணை கமாண்டர், கொலை நடந்த இடத்தில் தீவிரவாதிகள் யாரும் இல்லை எனவும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை எனவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2JYQmyjஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு இயந்திர துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டின் ராணுவ கமாண்டர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் அருகே கடந்த மாதம் 27ம் தேதி விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே துப்பாக்கியால் சுடப்பட்டும், கார்குண்டு மூலமும் கொலை செய்யப்பட்டார். இதன்பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஈரான் ராணுவ துணை கமாண்டர் அலி பதாவி கூறுகையில், “அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே கொலைக்கு செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், தொலைவிலிருந்து ஜூம் செய்யப்பட்டு, பிறகு செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அமைப்பை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், காரில் இருந்த விஞ்ஞானியின் முகத்தை மட்டும் மிகவும் பெரிதாகப் படம் பிடித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் அவர் மீது 13 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். விஞ்ஞானியின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி மீது ஒரு குண்டு கூட படவில்லை எனக் கூறிய துணை கமாண்டர், கொலை நடந்த இடத்தில் தீவிரவாதிகள் யாரும் இல்லை எனவும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை எனவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்