இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. பின்னர் நடைபெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இன்று மூன்றாவது போட்டியில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களம் காணுகிறது. இந்திய அணி தொடரை வென்று விட்டதால், இதுவரை ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்யும் சாதனையை எதிர்நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணி 40 நிமிடங்களுக்கு தொடங்குகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2K2lKMg

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்