Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொட்டும் கனமழை... சூழும் வெள்ளம்... - 30 வீடியோ பதிவுகள்! #TNRains

https://ift.tt/3mIxUIS

புரெவி புயல் வலுவிழந்த நிலையிலும், தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிகனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் நீரில் முழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகள், வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளன. தமிழகத்தில் பரவலாக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய கனமழை பாதிப்புகள் தொடர்பான வீடியோ பதிவுகள் இங்கே...

காஞ்சிபுரத்தில் மழைநீரில் மூழ்கி 5,000 ஏக்கர் விளை நிலம் முற்றிலும் நாசமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புரெவி புயல் காரணமாக சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கன மழையால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள சொரப்பட்டு கிராமத்திற்குச் செல்லும் தரைப்பாலத்தின் ஒருபகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வங்காரம், சாயல்மேடு, தலக்காணி குப்பம், செட்டிச்சாவடி போன்ற ஊர்களுக்குச் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிரசித்திப் பெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியுள்ளது. ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் இருக்கிறது.

புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் கடலூர் சிதம்பரம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்ததும் மின்சாரம் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆற்று நீர் பெருக்கெடுத்து வயல்களில் புகுந்ததால் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

புரெவி புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் மழையால் வேளச்சேரி பகுதியில் வழக்கம் போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் தாழ்வான பகுதியில் வசிக்கும் 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பெய்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வெளியேற்ற முடியவில்லை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அந்த இடத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு தினங்களுக்கு அதி கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை தண்டையார் பேட்டையில் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுரேஷ் என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோரமாக வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

 கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கன மழையால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அச்சடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் நீரின் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ராமேஸ்வரம் குத்துகால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சூறாவளியில் சிக்கி சேதமடைந்தள்ளன.

கடல் போல் காட்சியளிக்கும் கடலூர்...

வீடுகளை சூழந்த மழை நீர் - இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்கள்!

தஞ்சை : ஏரி உடைந்ததால் சாலையை சூழ்ந்த வெள்ளம்

3 நாட்களாக விடாமல் கொட்டித்தீர்க்கும் மழை - பெரம்பலூரின் நிலை!

தொடர்மழையால் பழவாற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு!

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாடுகள் - நீந்தி கரைசேரும் வீடியோ

மதகு உடைந்ததால் விளை நிலங்கள், குடியிருப்புகளில் வெள்ளநீர்

விழுப்புரம் : தொடர் மழையால் சேதமடைந்த சாலை

வெள்ளத்தால் தனித்தீவாக மாறிய கிராமம்

பெருக்கெடுத்த வெள்ளம் மூழ்கிய வாகனங்கள்

ஆதம்பாக்கத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் அவதி

பெருக்கெடுத்து ஓடும் அருவிகள், ஓடைகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்