2005, 2015 ஆண்டுகளுக்குப்பிறகு கடலூர் மாவட்டம் பெருமழை, பெருவெள்ளத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிக ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் மழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியில் 4 ஆயிரத்து 700 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், 3500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரியில் 12 ஆயிரம் கனஅடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ மழையும், கொத்தவால்சேரியில் 33 செ.மீ மழையும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் 33 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தொடர் கனமழையாலும்,உபரிநீர் வெளியேற்றத்தாலும், மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் சிதம்பரம் பிரதான சாலை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கு கனரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மழை வெள்ளத்தால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கள்ளிபாடி செல்லும் சாலையில் வக்காரமாரி ஏரி நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கீழ்புளியங்குடி, கள்ளிப்பட்டி, பூண்டி, இனமங்கலம், காவனுர், மருங்கூர் உள்ளிட்ட கிராம மக்கள், ஸ்ரீமுஷ்ணம் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக பெய்யும் கனமழையால், விருத்தாசலம் - கோ. பவழங்குடி, செல்லும் சாலையின் குறுக்கே உள்ள மாரி ஓடை தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் 10 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல திட்டக்குடி, வேப்பூர் தாலுகாக்களில் பத்து தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. 50 கிராமங்களுக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன. மன்னம்பாடியில் இருந்து எடையூர் செல்லும் சாலையின் உப்போடையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.
விருத்தாசலம் அருகே, என்எல்சி நிறுவனம் வாய்க்காலை முறையாக தூர் வராததால், சுரங்க மண்ணுடன் மழை நீர் விளைநிலத்தில் புகுந்தது. சு.கீரனூர், குமாரமங்கலம், கம்மாபுரம் ,கொளப்பாக்கம் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள என்எல்சி இரண்டாவது சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுரங்க மண் கரைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் 200க்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
என்எல்சி சுரங்கத்தில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதிகளிலும் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே வீரநந்தபுரம் பகுதியில் கனமழையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம் கிராமத்தில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
மங்கலம்பேட்டை அருகே தொடர் மழை காரணமாக 100 ஏக்கர் உளுந்து பயிர் நீரில் மூழ்கியது. மாரி ஓடை தூர்வாராமல் உள்ளதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் தண்ணீர் வடிய வழியில்லாமல் உளுந்து பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/36J8Ko02005, 2015 ஆண்டுகளுக்குப்பிறகு கடலூர் மாவட்டம் பெருமழை, பெருவெள்ளத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிக ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் மழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியில் 4 ஆயிரத்து 700 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், 3500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரியில் 12 ஆயிரம் கனஅடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ மழையும், கொத்தவால்சேரியில் 33 செ.மீ மழையும், சிதம்பரம் அண்ணாமலை நகரில் 33 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தொடர் கனமழையாலும்,உபரிநீர் வெளியேற்றத்தாலும், மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் சிதம்பரம் பிரதான சாலை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கு கனரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மழை வெள்ளத்தால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கள்ளிபாடி செல்லும் சாலையில் வக்காரமாரி ஏரி நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கீழ்புளியங்குடி, கள்ளிப்பட்டி, பூண்டி, இனமங்கலம், காவனுர், மருங்கூர் உள்ளிட்ட கிராம மக்கள், ஸ்ரீமுஷ்ணம் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக பெய்யும் கனமழையால், விருத்தாசலம் - கோ. பவழங்குடி, செல்லும் சாலையின் குறுக்கே உள்ள மாரி ஓடை தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் 10 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல திட்டக்குடி, வேப்பூர் தாலுகாக்களில் பத்து தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. 50 கிராமங்களுக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன. மன்னம்பாடியில் இருந்து எடையூர் செல்லும் சாலையின் உப்போடையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.
விருத்தாசலம் அருகே, என்எல்சி நிறுவனம் வாய்க்காலை முறையாக தூர் வராததால், சுரங்க மண்ணுடன் மழை நீர் விளைநிலத்தில் புகுந்தது. சு.கீரனூர், குமாரமங்கலம், கம்மாபுரம் ,கொளப்பாக்கம் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள என்எல்சி இரண்டாவது சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுரங்க மண் கரைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் 200க்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
என்எல்சி சுரங்கத்தில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதிகளிலும் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே வீரநந்தபுரம் பகுதியில் கனமழையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம் கிராமத்தில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
மங்கலம்பேட்டை அருகே தொடர் மழை காரணமாக 100 ஏக்கர் உளுந்து பயிர் நீரில் மூழ்கியது. மாரி ஓடை தூர்வாராமல் உள்ளதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் தண்ணீர் வடிய வழியில்லாமல் உளுந்து பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்