Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்தில் இயல்பைவிட 15% குறைவாக மழைப்பதிவு

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்தாலும் இயல்பை விட 15 சதவீதம் குறைவாகவே மழை பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையின் ஒரு பகுதியாக உருவான நிவர் புயலும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு , சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைபொழிவை தந்தது. தமிழகத்தில் பொதுவாக இந்த காலக்கட்டத்தில் 356 மில்லிமீட்டர்மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால் 15 விழுக்காடு குறைவாக அதாவது 303.8 மில்லிமீட்டர் மழை தான் பதிவாகியுள்ளது.

image

நிவர் புயலால் வட மாவட்டங்களில் பரவலாக எதிர்பார்த்த மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவு மழை பதிவாகி பற்றாக்குறையை போக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு இன்னும் அதிக மழை தேவை என்கிறது வானிலை ஆய்வு மையம். திருச்சியில் 54 சதவிகிதமும், நாகையில் 48 சதவிகிதமும், தஞ்சாவூரில் 46 சதவிகிதமும் மழை பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்.

பருவ மழை முடிய இன்னும் ஒரு மாதம் இருப்பதால், மாநில முழுவதும் பரவலாக இயல்பான மழைப் பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/37Gb9z5

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்