சரியான நேரம் வரும்போது மீண்டும் பந்து வீசுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார். இரு அணிகளுக்கு இடையே 2 ஆவது போட்டி நாளை நடைபெறுகிறது.
இது குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்ட்யா "நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பந்து வீச்சில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன். நீண்ட கால திட்டத்தை இந்திய அணி யோசித்து வருகிறது. டி20 உலககோப்பை, மற்ற முக்கியமான தொடர்களை பற்றி யோசிக்கும்போது, என்னுடைய பந்து வீச்சு கூட முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "இந்தியாவுக்காக விளையாடும் ஆல் ரவுண்டர் யாராவது ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வளர்த்து விளையாட வைக்க வேண்டிய வழிகளைத் தேட வேண்டும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது கஷ்டமானது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்" என்றார் ஹர்திக் பாண்ட்யா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்