ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கிய பாதுகாப்பைத் தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கனிம வளங்கள் திருடப்படுவதாகவும் அது குறித்தான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுவழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அது குறித்தான விசாரணையானது நடைபெற்றது. இதனைதொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த விசாரணைக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்த ஐஏஎஸ் சகாயம் தமிழகத்தில் ஒரு லட்சத்து பதினொராயிரம் கோடி அளவில் கனிம வளங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, தனிப்படைகளை அமைத்து வழக்கு குறித்தான விசாரணையை தொடர வேண்டும் என பரிந்துரை செய்தார்.
அதனைத்தொடர்ந்து அந்த பொறுப்பிலிருந்து சகாயம் விலகிய நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்தான விசாரணையை தொடந்து வருகிறது. இதனிடையே கனிம கொள்ளைகளைத் தடுக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த சகாயம் தலமையிலான குழுவிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பானது திரும்ப பெறப்பட்டது நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை தொடர தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமை செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையில் நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நிதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/33uWhC3ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கிய பாதுகாப்பைத் தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்