Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"சோதனை தரும் நாடுகளுக்கு கடுமையான பதிலடி" - பிரதமர் மோடி

இந்தியாவிற்கு சோதனை தர முற்படும் நாடுகளுக்கு நாம் தரும் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவ முகாமில் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது பேசிய அவர் இந்தியா தனது நலனில் துளியளவு கூட சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தற்போது உணர்ந்துள்ளதாகவும் கூறினார். எல்லையை நமது படைகள் தற்காப்பதை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றம் பிரதமர் தெரிவித்தார்.

எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு 130 கோடி மக்களும் ஆதரவாக இருக்கின்றனர் என தெரிவித்த பிரதமர் படையினரின் வீரத்தையும் தியாகத்தையும் நினைத்து நமது மக்கள் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக ஆக்கிரமிப்பு போக்கில் ஈடுபடும் சிலரால் உலகமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் சீனாவை மறைமுகமாக சாடினார். இந்த போக்கிற்கு எதிராக இந்தியா வலிமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தியா தனது படைகளின் திறனை வேகமாக அதிகரித்து வருவதுடன் பாதுகாப்பு தளவாடங்களில் சுயசார்பு நிலையையும் எட்டி வருவதாக பிரதமர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/32I5bfl

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்