Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம்: அரசு அறிவிப்பு

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

"மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்; கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகிய வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய், அதாவது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம், அரசு நிதியில் இருந்து 15 லட்சம் வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

மேலும், காயமடைந்த வீரர்கள் கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகியோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை தெற்குமாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அந்தத் தீயை அணைக்கும்போது, கட்டிடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

image

ரூ.1 கோடி நிதியுதவி வழங்குக: ஸ்டாலின்

இதனிடையே, "உயிர்த் தியாகம் செய்துள்ள அந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பங்களை மீட்க வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், "தீயணைப்பு வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இதுபோன்ற தீயணைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரு தீயணைப்பு வீரர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சக வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3lvKB9h

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்