
ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட தலைவராக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரது அதிகாரப்பூர்வ ஐடியில் 23.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுய விவரப் படம் சில நிமிடங்கள் முடக்கி வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக 'Media not displayed' எனத் தோன்றியது.
புகைப்பட பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் அந்தப் படம் நீக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. உரிய பதிலைத் தொடர்ந்து மீண்டும் அமித்ஷாவின் சுய விவரப்படத்தை ட்விட்டர் மீள்பதிவேற்றம் செய்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்