“உங்களுக்கு என் பெயர்கூட தெரிந்திருக்காது. ஆனால் பிடிஎஸ் ( BTS), ப்ளாக் பின்ங் (BLACKPINK)-ஐ தெரியாமல் இருந்திருக்காது” என்று அமெரிக்க பயணத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யேல் பேசியிருந்தார். பிடிஎஸ் - ப்ளாக் பின்க் , உலக அளவில் இன்றைய இளைய தலைமுறைகள் தூக்கி கொண்டாடும் இசை குழுக்களாக இருக்கின்றன என்று கூறினால், அதில் மிகை எதுவுமில்லை. சினிமா, பாப் இசை குழுக்கள், நாடகங்கள் மூலம் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தென் கொரியா இருந்திருக்கிறது.
குறிப்பாக, கொரியாவில் இசைக்குழு உருவாக்க பின்னணியில் பெரும் பயிற்சி முறை இருக்கிறது. பொழுதுபோக்குத் துறை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடுகள் மூலம், இளம் தலைமுறையின் நடனம், பாடும் திறமைகள் கண்டறிந்து குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு போட்டிக் களத்தில் இறக்கப்படுகின்றன. இந்த இசைக் குழுக்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் (குறிப்பாக எந்த நாட்டில் கொரிய பாப் குழுவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த நாட்டை சேர்ந்தவர்கள்) இடம்பெற்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு ஷேர்யா, ஆரியா போன்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண்களும் கே-பாப்பில் இணைந்து பாப் புகழ் வெளிச்சத்துக்குள் நுழைந்துள்ளனர். நிச்சயம் இவை எல்லாம் வரவேற்க கூடியவைதான்.
https://ift.tt/lDFEsBc“உங்களுக்கு என் பெயர்கூட தெரிந்திருக்காது. ஆனால் பிடிஎஸ் ( BTS), ப்ளாக் பின்ங் (BLACKPINK)-ஐ தெரியாமல் இருந்திருக்காது” என்று அமெரிக்க பயணத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யேல் பேசியிருந்தார். பிடிஎஸ் - ப்ளாக் பின்க் , உலக அளவில் இன்றைய இளைய தலைமுறைகள் தூக்கி கொண்டாடும் இசை குழுக்களாக இருக்கின்றன என்று கூறினால், அதில் மிகை எதுவுமில்லை. சினிமா, பாப் இசை குழுக்கள், நாடகங்கள் மூலம் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தென் கொரியா இருந்திருக்கிறது.
குறிப்பாக, கொரியாவில் இசைக்குழு உருவாக்க பின்னணியில் பெரும் பயிற்சி முறை இருக்கிறது. பொழுதுபோக்குத் துறை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடுகள் மூலம், இளம் தலைமுறையின் நடனம், பாடும் திறமைகள் கண்டறிந்து குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு போட்டிக் களத்தில் இறக்கப்படுகின்றன. இந்த இசைக் குழுக்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் (குறிப்பாக எந்த நாட்டில் கொரிய பாப் குழுவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த நாட்டை சேர்ந்தவர்கள்) இடம்பெற்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு ஷேர்யா, ஆரியா போன்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண்களும் கே-பாப்பில் இணைந்து பாப் புகழ் வெளிச்சத்துக்குள் நுழைந்துள்ளனர். நிச்சயம் இவை எல்லாம் வரவேற்க கூடியவைதான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்