கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது. துறுதுறு முகம், காக்கி உடையில் கெத்து என கோவையில் டாக் ஆஃப் தி டவுனான பஸ் டிரைவர் ஷர்மிளா உடனான ஒரு நேர்காணல்...
ஷர்மிளா... ‘ரைடர் ஷர்மி’ ஆனது எப்படி? - “எனக்கு 7-ம் வகுப்பில் இருந்தே டிரைவிங் மீது ஒரு விருப்பம். அதனால் எனக்கு வாகனங்களின் மீது ஒரு தனிக் காதல் இருந்துகொண்டே இருந்தது. கடைக்கு செல்தென்றால் கூட நான் வீட்டில் இருக்கும் பைக்கை எடுத்துக்கொண்டுதான் செல்வேன். அப்படித்தான் முதல் முதலில் ஸ்பௌண்டர் பைக்கில் ஆரம்பித்தது என் ரைடு. அதில் நான் அடிக்கடி எங்கள் ஏரியாக்களில் நான் சர்... சர்... என்று போய் வருவதைப் பார்க்கும் அங்கு உள்ள இளைஞர்கள் சிலர் என்னிடம் ‘என்னம்மா ரைடர் மாதிரி சும்மா சர் சர்ன்னு போய்ட்டு வர்றன்’னு சொல்லி, எனக்கு ‘ரைடர்’னு ஒரு பேரும் வச்சிட்டாங்க. எங்க ஏரியாவுல என் பெயரைச் சொல்லிகேட்டால் கூட தெரியாது. ரைடர் என்றால் சொல்லிவிடுவார்கள். அப்போதே அந்த நேரத்தில் இருந்தே எனக்கு வாகனங்களின் மீது அப்படி ஒரு தனி காதல் இருந்தது.
https://ift.tt/BzqyH4eகோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது. துறுதுறு முகம், காக்கி உடையில் கெத்து என கோவையில் டாக் ஆஃப் தி டவுனான பஸ் டிரைவர் ஷர்மிளா உடனான ஒரு நேர்காணல்...
ஷர்மிளா... ‘ரைடர் ஷர்மி’ ஆனது எப்படி? - “எனக்கு 7-ம் வகுப்பில் இருந்தே டிரைவிங் மீது ஒரு விருப்பம். அதனால் எனக்கு வாகனங்களின் மீது ஒரு தனிக் காதல் இருந்துகொண்டே இருந்தது. கடைக்கு செல்தென்றால் கூட நான் வீட்டில் இருக்கும் பைக்கை எடுத்துக்கொண்டுதான் செல்வேன். அப்படித்தான் முதல் முதலில் ஸ்பௌண்டர் பைக்கில் ஆரம்பித்தது என் ரைடு. அதில் நான் அடிக்கடி எங்கள் ஏரியாக்களில் நான் சர்... சர்... என்று போய் வருவதைப் பார்க்கும் அங்கு உள்ள இளைஞர்கள் சிலர் என்னிடம் ‘என்னம்மா ரைடர் மாதிரி சும்மா சர் சர்ன்னு போய்ட்டு வர்றன்’னு சொல்லி, எனக்கு ‘ரைடர்’னு ஒரு பேரும் வச்சிட்டாங்க. எங்க ஏரியாவுல என் பெயரைச் சொல்லிகேட்டால் கூட தெரியாது. ரைடர் என்றால் சொல்லிவிடுவார்கள். அப்போதே அந்த நேரத்தில் இருந்தே எனக்கு வாகனங்களின் மீது அப்படி ஒரு தனி காதல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்