Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘இது விராட் கோலியா... இல்ல ஸ்மிருதி மந்தனாவா?’ - WPL லீக் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

https://ift.tt/ehNmjHy

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போன்று, நேற்று நடந்த மகளிர் லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா பந்துவீசியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.

மகளிர் டி20 ஐபிஎல் போட்டி முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்குகொண்டுள்ள இந்தப் போட்டியின் லீக் சுற்று கடந்த 4-ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதில், நவி மும்பை டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நேற்று முதலில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்ததை அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, 16.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் மும்பை இந்தியன்ஸ் முன்னேறியுள்ளது. மொத்தம் 8 லீக் போட்டிகளை விளையாடிய ஆர்சிபி அணி, 2-ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4-ம் இடம் பிடித்து, பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

image

இந்நிலையில், நேற்று நடந்த லீக் போட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டனும், பேட்டருமான ஸ்மிருதி மந்தனா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 17-வது ஓவரை பந்துவீச வந்தார். எப்போதாவது பந்துவீசும் ஸ்மிருதி மந்தனா, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது, பந்துவீசினார். 3 பந்துகளை அவர் வீசிய நிலையில், அவரது ஓவரில் 9 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

இந்த வீடியோ வைரலான நிலையில், ஸ்மிருதி மந்தனா பந்துவீசிய விதம், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதே ஆர்சிபி-யின் ஆடவர் அணியின் கேப்டனுமான விராட் கோலி பந்துவீசுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருவருமே அரிதாக பந்துவீசுவதால், அவ்வாறு இருக்கலாம் என்றும், எனினும் பந்துவீசும் விதம் ஒரே சாயலில் இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பரபரப்பாக நடந்துமுடிந்துள்ள மகளிர் ஐபிஎல் லீக் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே, மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 24-ம் தேதி நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றிபெறும் அணி, 26-ம் தேதி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்