Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

குறைவான பந்துகளில் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகள்... அக்சர் பட்டேலின் புதிய சாதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் டிரவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதற்கு பிறகு, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் சாதனையை முறியடித்து புதிய ஒரு சாதனையை படைத்துள்ளார் அக்சர் பட்டேல்.

இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்திய அணிக்கு ஒரு ஸ்பின்னர் தான் தேவை என்ற இடத்திலும் கூட, ரவீந்திர ஜடேஜாவின் பெயரே முதலில் இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சுழற்பந்து ஆளுமையாக திகழ்ந்தும், சில போட்டிகளில் ஜடேஜா கையே தவிர்க்க முடியாத இடத்தில் ஓங்கி இருந்தது. ஆனால் ஜடேஜா காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக வெளியேறிய போது, இரண்டு ஸ்பின்னர்களுக்கு இடையே நிச்சயம் கடுமையான போட்டியிருந்தது. அந்த பட்டியலில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் உட்பட, அக்சர் பட்டேலின் பெயரும் இருந்தது.

image

வாசிங்டன் சுந்தரும் அணியில் மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும், அவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வெளியேறிய நிலையில், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அக்சர் பட்டேல், பவுலிங், பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு, ‘ஜடேஜாவிற்கு மாற்றுவீரர் நான் தான்’ என்று நிரூபித்து காட்டினார்.

அறிமுக தொடரில் 3 போட்டிகளிலேயே 27 விக்கெட்டுகளை சாய்த்த அக்சர் பட்டேல்!

2021ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார், அக்சர் பட்டேல். அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அக்சர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் உட்பட, 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 போட்டிகளில், மொத்தமாய் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியிருந்தார், அக்சர் பட்டேல்.

image

குறைவான பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!

தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியில் டிரவிஸ் ஹெட் விக்கெட்டை கைப்பற்றிய அக்சர் பட்டேல், இந்திய கிரிக்கெட்டில் ஒரு அபாரமான சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

image

டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அக்சர், குறைவான பந்துகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே 2465 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனையை முறியடித்து, 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அக்சர்.

குறைவான பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்!

அக்சர் பட்டேல்- 2205 பந்துகள்
ஜஸ்பிரிட் பும்ரா- 2465 பந்துகள்
கர்ஸன் ஹாவ்ரி - 2534 பந்துகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 2597 பந்துகள்.

image

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், பேட்டைக்கொண்டு ஒரு அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போதெல்லாம், தனது பேட்டிங்க் திறமையாலும் அணியை காப்பாற்றிய அக்சர், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, இந்தியாவின் விராட் கோலிக்கு பிறகு, அதிக ரன்களை அடித்த 3ஆவது வீரராக இருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/e6oPSAc

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்