நடுவரின் சர்ச்சை முடிவால் போட்டியிலிருந்து வெளியேறிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர்? 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
9-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது, 20 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கான பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் போட்டியில் கேரளா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, மிகவும் எதிர்பார்ப்போடு துவங்கிய இந்த போட்டியின் முழுநேர ஆட்டத்தின் 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
இதில், போட்டியின் 97-வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் சுனில் சேத்ரி தங்கள் அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஃப்ரீ கிக் வழங்கியதும், கேரளா வீரர்கள் அனைவரும் அதனை தடுக்க தயாராகி வந்த நிலையில், நடுவர் விசில் அடிப்பதற்கு முன் QUICK FREE KICK முறையில் சுனில் சேத்ரி கோல் அடித்தது செல்லாது எனக் கூறி கேரளா அணி வீரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்,
இதையடுத்து கேரளா அணியின் பயிற்சியாளர் இவான் VUKOMANOVIC போட்டியில் 25 நிமிடங்கள் மீதமிருந்தும் தொடர்ந்து விளையாடாமல் தங்களின் வீரர்களை அழைத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது, இதையடுத்து மூலம் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதுவரை நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று கேரளா அணியினர் செய்தது சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய பேசு பொருளாகி வருகிறது, போட்டியின் நேரத்தில் நடுவர்கள் தீர்ப்பை ஏற்காமல் வெளியேறினால் அந்த அணிக்கு அவர்கள் புள்ளிகள் குறைக்கப்படும், அபரதாம் விதிக்கப்படும் அதேபோல அந்த பயிற்சியாளர் மீது இந்திய கால்பந்து கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கால்பந்து பயிற்றுனர் முருகுவேந்தனிடம் கேட்டதற்கு, நடுவர் ஃப்ரீ கிக் கொடுத்துவிட்டு விசிலுக்காக காத்திருங்கள் என்று சொன்னால் மட்டுமே பந்தை அடிக்காமல் காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் உடனே (ஞரஉம ளவயசவ) பந்தை அடிக்கலாம். இப்படித்தான் இந்த கோல் அடிக்கப்பட்டுள்ளது. இது நடுவரின் சரியான முடிவுதான். என்ன இருந்தாலும் 25 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில், தொடர்ந்து விளையாடாமல் அணி வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றது பயிற்றுனரின் தவறு என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3tZfoKLநடுவரின் சர்ச்சை முடிவால் போட்டியிலிருந்து வெளியேறிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர்? 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்