Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

3 ஆண்டுகளாக டென்ட்டில் இரவுத் தூக்கம்: பிரிட்டன் சிறுவனின் கின்னஸ் சாதனைக் கதை

"என் வாழ்வின் சிறந்த மூன்றாண்டுகளை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த 3 ஆண்டுகளில் சில அற்புதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அருமையான அனுபவங்களைப் பெற்றேன். என்னால் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால், மக்கள் நினைப்பதைவிட குழந்தைகளால் நிறைய செய்ய முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக உணர்கிறேன்" - இது 3 ஆண்டுகள் டென்ட்டில் மட்டுமே இரவுப் பொழுதை கழித்த சிறுவன் கின்னஸ் சாதனை பயணம் பற்றி தானே கூறியதாகும்.

பொதுவாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா செல்வோர் இதுபோன்ற டென்ட்களில் தங்குவர். இல்லை சில நேரங்களில் ஏதேனும் பிரச்சாரத்திற்காக திரள்போர் இவ்வாறாக டென்ட்டில் தங்குவார்கள். ஆனால், முழுக்க முழுக்க மூன்ற ஆண்டுகளாக இரவு நேரங்களில் டென்ட்டில் தங்கியிருந்தார் பிரிட்டனைச் சேர்ந்த மேக்ஸ் வூஸி என்ற சிறுவன். 2020-ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி அவருடைய 10-வது வயதில் அச்சிறுவன் "Boy in the Tent" என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். ஹாஸ்பைஸ் கேர் எனப்படும் வயதான, நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட, இறக்கும் தருவாயில் உள்ள நபர்களின் இறுதி நாட்களுக்கான சிகிச்சை அளிக்கும் பராமரிப்பு மையத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

https://ift.tt/2WcTzOH

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்