Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் என்ன விலையில் எப்போது அறிமுகமாகிறது Xiaomi 13 Pro? மொபைலின் அம்சங்கள் இதோ...!

https://ift.tt/Iz6bFq4

ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், அதைச் சார்ந்த நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் அவ்வப்போது அப்டேட்களைச் செய்து வருகின்றன. அப்படி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செல்போன் நிறுவனங்கள் பலவும் தங்களின் புதுப்புது மொபைல்களை தயாரித்து வருகின்றன. அப்படித்தான் ஜியோமி (Xiaomi) நிறுவனம் தனது ஜியோமி 13 ப்ரோ ( Xiaomi 13 Pro) மாடலை வெளியிட்டுள்ளது. இதன் இந்திய வெளியீட்டை தற்போது அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

image

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. அதற்கான தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, இரவு 9.30 மணிக்கு ஜியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜியோமி 13 ப்ரோ அறிமுக நிகழ்வு அதன் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களான, ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

ஜியோமி 12S சீரிஸைத் தொடர்ந்து ஜியோமி மற்றும் லெய்கா கூட்டணியில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட்ஃபோனாக இது இருக்கும். ஜியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K Flexible E6 சாம்சங் AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விசி லிக்விட் கூலிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.60,000க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்