நேற்றைய ஆட்டத்தின் போது ஜடேஜா தனது கை விரலில் ஏதோவொன்றை தேய்ப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தை விளையாட தொடங்கியுள்ளனர். அரைசதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களத்தில் உள்ளனர்.
ஆசியக் கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்நிலையில், நேற்றை ஆட்டத்தின் போது ஜடேஜா தனது சக வீரர் முகமது சிராஜிடம் இருந்து எதையோ பெற்றுக் கொண்டு அதை தனது இடது கை ஆள்காட்டி விரலில் தேய்ப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதனை சர்ச்சையாக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விக்ராந்த் குப்தா என்னும் ஒரு பத்திரிகையாளர், ஜடேஜா வலி நிவாரணி ஆயின்மெண்ட்டை விரல்களுக்கு தடவுவதாக இந்திய முகாம் கூறியதாக தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்தாலும் இது பொதுவான நடைமுறை என்றும், ஐசிசியால் இது அனுமதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் போட்டி நடுவர்கள் புகார் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்