Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திருப்பதி கோவிலின் வருமானம் அதிகரிப்பு - இந்தாண்டு எவ்வளவு?

நடப்பு நிதி ஆண்டில் 1500 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கும் ஏழுமலையான் கோவில் உண்டியல்.

2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் 1000 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் மட்டும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் 1275 கோடியே 31 லட்சம் ரூபாயை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்ச ரூபாயும்,மே மாதம் 130 கோடியே 29 லட்ச ரூபாயும், ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்ச ரூபாயும்,
ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்ச ரூபாயும்,ஆகஸ்ட் மாதம் 138 கோடியே 34 லட்ச ரூபாயும், செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்ச ரூபாயும்,அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயும், நவம்பர் மாதம் 125 கோடியே 30 லட்சம் ரூபாயும், டிசம்பர் மாதம் 123 கோடியே 16 லட்சம் ரூபாயும் கடந்த ஜனவரி மாதம் 123 கோடியே 7 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் கடந்த 10 மாதங்களில் 1275 கோடியே 31 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

image

இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். தற்போதைய நிலவரத்தின்படி ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.

இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடப்பு பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மட்டும் ஏழுமலையானுக்கு மேலும் 250 கோடி ரூபாய் காணிக்கை வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நடப்பு நிதியாண்டில் ஏழுமலையான் கோவில் உண்டியல் 1500 கோடி ரூபாயை காணிக்கையாக பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/fFEXgam

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்