Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழி - உலகத் தரத்தில் ஓர் ஆவணப்படம்!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பலரும் கடந்த 30 ஆண்டுகளாக ஆங்கில வழியில் பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். பல நாடுகளில் குடியேறி வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர், தமிழின் எழுத்து வடிவத்தை எழுதத் தெரியாதவர்கள். ‘அம்மா’ என்கிற சொல்லை ‘Amma’ என ஆங்கில எழுத்துகள் கொண்டு தட்டச்சு செய்கிறவர்கள். இவ்வாறே ஆங்கில எழுத்துகளின் வழியாக தமிழைச் ‘உரையாடல்’ மொழியாகப் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைய தலைமுறையிடம் இப்படியேனும் தமிழ் வாழ்த்துகொண்டிருக்கிறதே எனக் கடந்து போகிறோம். ஆனால், வியத்தகு வகையில் ஏழு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று தமிழ் மொழியின் எழுத்து வடிவத் தடத்தைத் தேடிக் கண்டறிய ஆவல் கொண்டு, ‘தமிழி’ எனும் கூர்மையான ஆவணப்படத்தை கடும் உழைப்பின் வழியே சாத்தியமாக்கி உலகத் தமிழ்ச் சமூகத்துக்கு அர்பணித்திருக்கிறார்கள். தமிழ் மொழி வரலாறு, ஆய்வு என்றால் அது 60 வயதைக் கடந்த பேராசிரியர்களும் மொழியியலாளர்களும் புழங்கும் தளம் என தள்ளியிருக்காமல் முப்பது வயதைக் கடக்காக இவர்கள் சாதித்திருப்பது தமிழ் மொழியின் மீதான, தாய்மொழி மீதான அவர்களது நேசத்தையும் அதன் தொன்மையை அறிந்துகொள்வதில் உள்ள பேரார்வத்தையும் காட்டுகிறது.

https://ift.tt/4f1zebP

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்