கிருஷ்ணகிரி ஒசூர் அருகே இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம் குறித்து மாவட்ட எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் நேற்று வியாழன் கிழமை எருது விடும் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்களுடன் சேர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பெரும்பாலானோர் கலைந்து சென்று எருதுவிடும் திருவிழாவினை நடத்தினர். ஆனால் சில இளைஞர்கள் மாவட்டம் முழுவதிலும் எருது விடும் திருவிழாக்கு தடைகள் விதிக்கக்கூடாது என்ற கோரிகையோடு, தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த முற்பட்ட பொழுது, திடீரென இளைஞர்கள் அரசு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீச்சியடித்தும், புகைக்குண்டு வீசியும் அங்கிருந்து கூட்டத்தை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், லத்தியால் தாக்கியும், பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், பெண் காவலர் ஒருவரிடம் அந்த இளைஞர் தகாத முறையில் நடந்துக்கொண்டார். அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அதனால் தான் அவரிடம் அப்படி நடந்துகொள்ள வேண்டிய நிலை உருவானது என விளக்கம் அளித்துள்ளார். மேலும் நேற்றைய சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், விரைவில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/9F5iywtகிருஷ்ணகிரி ஒசூர் அருகே இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம் குறித்து மாவட்ட எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்