நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 9-வது முறையாக கேன் வில்லியம்சனை அவுட் செய்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மௌண்ட் மாங்கனியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லே (2), பென் டக்கெட் (9), போப் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர்.
இந்த கூட்டணியை நியூசிலாந்து பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியாதநிலையில், ஹாரி ப்ரூக் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், அதன்பிறகு வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (27) உள்பட யாரும் நிலைத்து ஆடாததால் அந்த அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்கேளர் செய்தது.
ஜோ ரூட் 153 ரன்கள் எடுத்த நிலையிலும், லீச் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களை 40 வயதான இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜாக் லீச் போட்டி போட்டுக்கொண்டு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிராட் ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார். இதனால் இரண்டாம் நாளான இன்றைய நாள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்நிலையில், ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 9-வது முறையாக, டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை அவுட் செய்துள்ளார். மொத்தம் 20 இன்னிங்சில், 9வது முறையாக கேன் வில்லியம்சனை, ஆண்டர்சன் அவுட் செய்து உள்ளார். குறிப்பாக, நியூசிலாந்து மண்ணில் 6 முறை கேன் வில்லியம்சனின் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றியுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக பிராட் 6 முறை டெஸ்ட் போட்டியில் வில்லியம்சனை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஷேன் வார்னே 103 விக்கெட்டுகளையும், பிராட் 90 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 84 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், அனைத்து வடிவ போட்டிகளிலும் 969 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஆண்டர்சன், தற்போது முத்தையா முரளிதரன் (1347), ஷேன் வார்னே (1001) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஷேன் வார்னே சாதனையை முறியடிக்க ஆண்டர்சனுக்கு இன்னும் 33 விக்கெட்டுகளே உள்ளது. அவ்வாறு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 1000 விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 685 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள ஆண்டர்சன், ஷேன் வார்னேவின் (708) சாதனையை முறியடிக்க 23 விக்கெட்டுகளே இன்னும் தேவைப்படுகிறது. மேலும், 34 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து 6-வது இடத்தில் உள்ள ஆண்டர்சன், இன்னும் சில காலம் நல்ல ஃபார்முடன் விளையாடும் பட்சத்தில் அதிலும் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்