மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டன் கொலை - காவலர் உள்ளிட்ட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலையழகு புரம் 1வது தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன். இவர் நகை கடையை நடத்தி வருவதோடு, இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சோலை அழகுபுரம் பகுதியில் மணிகண்டன் சாலையில் நடந்து சென்ற போது பின்னாடி இவரைத் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த மணிகண்டனுக்கு மனைவி லெட்சுமி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த கொலை சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சோலை அழகுபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவலர் ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடை நடத்தி வரும் மணிகண்டன் மீது, ஏற்கனவே, நகை தொழிலுக்காக கொடுத்த பணத்தை திருப்பி தராதது, மற்றும் காவலர் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து 7 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/WtdrkYlமதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டன் கொலை - காவலர் உள்ளிட்ட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்