விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக ரூ.15 லட்சத்திற்கும் குறைந்த செலவில் 600 சதுர அடியில் இன்டர் லாக் முறையில் வீடு கட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெயிலான் ரமேஷ். விருதுநகரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். தனக்குச் சொந்தமான இடத்தில் புதுமையாகவும், குறைந்த செலவிலும், முற்றத்துடன் பழமையான முறையில் வீடு கட்ட வேண்டும் என்பது இவரது கனவு. அதை செயல்படுத்த பல்வேறு இடங்களிலும் அவரது தேடல்கள் விரிந்தது. இறுதியில், தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதைப் போன்று இன்டர்லாக் முறையில் சுடாத மண் கல்லை வைத்து வீடு கட்டும் முயற்சியல் இறங்கி, தான் விரும்பியதைப் போலவே வீடும் கட்டி முடித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இன்டர் லாக்கிங் முறையில் வீடு கட்டியது தான்தான் என்றும் பெருமையோடு கூறுகிறார்.
https://ift.tt/pehCZK4விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக ரூ.15 லட்சத்திற்கும் குறைந்த செலவில் 600 சதுர அடியில் இன்டர் லாக் முறையில் வீடு கட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெயிலான் ரமேஷ். விருதுநகரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். தனக்குச் சொந்தமான இடத்தில் புதுமையாகவும், குறைந்த செலவிலும், முற்றத்துடன் பழமையான முறையில் வீடு கட்ட வேண்டும் என்பது இவரது கனவு. அதை செயல்படுத்த பல்வேறு இடங்களிலும் அவரது தேடல்கள் விரிந்தது. இறுதியில், தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதைப் போன்று இன்டர்லாக் முறையில் சுடாத மண் கல்லை வைத்து வீடு கட்டும் முயற்சியல் இறங்கி, தான் விரும்பியதைப் போலவே வீடும் கட்டி முடித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இன்டர் லாக்கிங் முறையில் வீடு கட்டியது தான்தான் என்றும் பெருமையோடு கூறுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்