மதுரை: மதுரை மேலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து மாங்குளம் செல்லும் சாலையில் பூசாரிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கல்குவாரிக்காக பாதி உடைக்கப்பட்ட பாறையை இப்பகுதியினர் பாறைப்பள்ளம் என அழைக்கின்றனர். இப்பாறையில் குகை போன்ற புடவு ஒன்றுள்ளது. இப்புடவின் பக்கவாட்டுப்பாறைகள், மேலேயுள்ள பாறைகளிலும் ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து மாங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பாண்டித்துரை அளித்த தகவலின்படி பாறை ஓவியங்கள் ஆய்வாளர் பாலாபாரதி, தொன்மை ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
https://ift.tt/5S7bKNlமதுரை: மதுரை மேலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து மாங்குளம் செல்லும் சாலையில் பூசாரிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கல்குவாரிக்காக பாதி உடைக்கப்பட்ட பாறையை இப்பகுதியினர் பாறைப்பள்ளம் என அழைக்கின்றனர். இப்பாறையில் குகை போன்ற புடவு ஒன்றுள்ளது. இப்புடவின் பக்கவாட்டுப்பாறைகள், மேலேயுள்ள பாறைகளிலும் ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து மாங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பாண்டித்துரை அளித்த தகவலின்படி பாறை ஓவியங்கள் ஆய்வாளர் பாலாபாரதி, தொன்மை ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்