புதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில், டிக்கெட் வாங்காதவர்கள் திரையரஙகிற்குள் திபு திபுவென நுழைந்ததால் படம் திரையிடமுடியாமல் போனது, போலீசார் லேசான தடியடி நடத்தி திரையரங்கில் இருந்து விரட்டினர். டிக்கெட் தரமறுத்த திரையரஙகத்தின் மீது கற்கள் வீசப்பட்டதால் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியது.
புதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படஙகள் இன்று முதல் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அஜித் நடித்த துணிவு படத்தை நள்ளிரவு 1 மணிக்கு வெளியிட மாவட்ட ஆட்சியரிடம் 5 திரையரங்குகள் மட்டுமே அனுமதி பெற்றது. ஆனால் பின்னர் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக இரண்டு திரையரங்கில் மட்டுமே நள்ளிரவு துணிவு படம் வெளியானது.
அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நள்ளிரவு 12.30க்கு திரையரங்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்குள் நுழைந்தனர். அதில் டிக்கெட் வைத்திருந்தவர்களோடு சேர்ந்து, டிக்கெட் கிடைக்காதவர்கள் என அனைவரும் திமுதிமுவென உள்ளே நுழைந்ததால் திரையரஙகில் இரண்டு மடஙகு கூட்டம் இருந்தது.
இந்நிலையில் போலீசார் வரவழைக்கப்பட்டு டிக்கெட் எடுக்காமல் திரையரஙகில் இருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது செல்ல மறுத்தவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதனைத்தொடர்ந்து 1 மணிக்கு திரையிட இருந்த படம் 2 மணிக்கு திரையிடபட்டது. அஜித் ரசிகர்கள் ஆராவாரத்துடன் படத்தை ரசித்து பார்த்தனர்.
இதனிடையே நேற்று இரவு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள முருகா திரையரஙகில் துணிவு படத்திற்கு டிக்கெட் கேட்டு சென்ற ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லை என்றும், நள்ளிரவு படம் வெளியாகவில்லை என தெரிந்ததால், திரையரங்கின் மீது கற்கள் வீசப்பட்டதால் திரையரங்கின் வாசலில் இருந்த கண்ணாடி உடைந்து நொருங்கியது. இது குறித்து டி.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/d9TQwKeபுதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில், டிக்கெட் வாங்காதவர்கள் திரையரஙகிற்குள் திபு திபுவென நுழைந்ததால் படம் திரையிடமுடியாமல் போனது, போலீசார் லேசான தடியடி நடத்தி திரையரங்கில் இருந்து விரட்டினர். டிக்கெட் தரமறுத்த திரையரஙகத்தின் மீது கற்கள் வீசப்பட்டதால் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியது.
புதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படஙகள் இன்று முதல் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அஜித் நடித்த துணிவு படத்தை நள்ளிரவு 1 மணிக்கு வெளியிட மாவட்ட ஆட்சியரிடம் 5 திரையரங்குகள் மட்டுமே அனுமதி பெற்றது. ஆனால் பின்னர் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக இரண்டு திரையரங்கில் மட்டுமே நள்ளிரவு துணிவு படம் வெளியானது.
அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நள்ளிரவு 12.30க்கு திரையரங்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்குள் நுழைந்தனர். அதில் டிக்கெட் வைத்திருந்தவர்களோடு சேர்ந்து, டிக்கெட் கிடைக்காதவர்கள் என அனைவரும் திமுதிமுவென உள்ளே நுழைந்ததால் திரையரஙகில் இரண்டு மடஙகு கூட்டம் இருந்தது.
இந்நிலையில் போலீசார் வரவழைக்கப்பட்டு டிக்கெட் எடுக்காமல் திரையரஙகில் இருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது செல்ல மறுத்தவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதனைத்தொடர்ந்து 1 மணிக்கு திரையிட இருந்த படம் 2 மணிக்கு திரையிடபட்டது. அஜித் ரசிகர்கள் ஆராவாரத்துடன் படத்தை ரசித்து பார்த்தனர்.
இதனிடையே நேற்று இரவு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள முருகா திரையரஙகில் துணிவு படத்திற்கு டிக்கெட் கேட்டு சென்ற ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லை என்றும், நள்ளிரவு படம் வெளியாகவில்லை என தெரிந்ததால், திரையரங்கின் மீது கற்கள் வீசப்பட்டதால் திரையரங்கின் வாசலில் இருந்த கண்ணாடி உடைந்து நொருங்கியது. இது குறித்து டி.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்