தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு (சுஏஆ) இயந்திரம் குறித்து கருத்து தெரிவிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பதவிகளில் யாரும் இல்லை எனக் கூறி, அக்கடிதத்தை திருப்பி அனுப்பியது.
அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே கடிதம் அனுப்பப்பட்டது' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்