Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”இந்த லிஸ்ட்ல யாருலா இருக்கா..” - விக்ரம் 2ல் வில்லனாகப்போவது இவர்தானா? - கசியும் தகவல்கள்

உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்குநர்கள் படம் எடுக்கும் காலம் போய் தற்போது இயக்குநர்களின் கதையில் உச்ச நட்சத்திரங்கள் படம் நடிக்கும் காலமாக தமிழ் சினிமா மாறி வருகிறதா என்ற கேள்வி லோகேஷ் கனகராஜின் படைப்புகளால் எழுந்து வருகிறது என்றே கூறலாம்.

ஏனெனில் கைதி என்ற சின்ன பட்ஜெட் படத்தை பிளாக் பஸ்டெராக கொண்டு போகச் செய்ததோடு அதற்கடுத்தபடியாக கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என நட்சத்திர பட்டாளங்களையே வைத்து விக்ரம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார்.

தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் அந்த படமும் விக்ரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் ப்ரீக்வல், சீக்வலாக இருக்குமா, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் எந்த வகை என்றெல்லாம் ரசிகர்கள் பெருத்த ஆவலோடு காத்திருக்கிறாகள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் தளபதி 67 அப்டேட்கள் ஜனவரி 22 முதல் வெளிவரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா வந்ததை போல, அதனை ஒத்த ஒரு மாஸ் வில்லன் கேரக்டரும் இருக்கும் என்றும் அதில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் வெளியான தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் அதனை விக்ரம் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. விக்ரம் படத்திலேயே சூர்யா நடத்த கதாபாத்திரத்திற்கு முதலில் விக்ரமை தான் லோகேஷ் அணுகியுள்ளார். சின்ன ரோலாக இருப்பதாக கூறி விக்ரம் அதனை மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. அதேபோல் தளபதி 67இல் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் விக்ரமை அணுகியுள்ளார் லோகேஷ். ஆனால் அதற்கும் மறுத்துவிட்டார். ஆனால், இந்த சந்திப்புகளின் போது இருவருக்கும் இடையே ஒரு ஒத்துணர்வு நன்றாக உருவாகியுள்ளார். விக்ரமை நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகேஷ்.

விக்ரம் 2 படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற இரட்டை நட்சத்திரங்கள் மீண்டும் ஒரே திரையில் எப்போது தோன்றுவார்கள் என எக்கச்சக்கமான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் ஒட்டுமொத்த கோலிவுட் பட்டாளத்தையே தன்னுடைய படங்களில் கொண்டு வர லோகேஷ் தரமான சம்பவங்களை லோட் செய்துக் கொண்டிருக்கிறார் என்றே பேசப்பட்டு வருகிறது.

வித்தியாசமாக கதாப்பாத்திரங்களில் நடிக்க தயங்காதவர் சியான் விக்ரம் என்பது திரைத்துறையே அறியும். அதுவும் வித்தியாசமான கேரக்டர் என்றால் கணக்கச்சித்தமாக செய்து முடிப்பார் என்பதால் விக்ரம் இரண்டாம் பாகம் குறித்த ஆர்வத்தை ரசிகர்கள் வீடியோ மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/BIjKwrx

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்