ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஹீரோக்களாக மாறிவரும் பிரான்ஸ் அணி வீரர்களுக்கும், இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோலையே அடித்ததில்லை என்கிற ஜாம்பவான் மெஸ்ஸிக்கும் இடையேயான இந்த உலகக்கோப்பை போட்டி கடும் சவால்கள் நிறைந்த ஒன்றாகவும், சுவாரசியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கப்போகிறது.
ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்நோக்கியிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. இதில் பட்டம் வெல்ல நடப்புச் சாம்பியன் பிரான்ஸூம், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் முழுவீச்சில் தயாராகி உள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு போட்டி பற்றித்தான் உலகம் முழுவதும் பேச்சாக உள்ளது. கனவுக் கோப்பை என வர்ணிக்கப்படும் அந்த உலகக் கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது மேலோங்கி நிற்கிறது.
இந்திய நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இப்போட்டியில் உலகின் தலைசிறந்த 2 அணிகள் மோதவிருக்கின்றன.
இதுதான் கடைசி வாய்ப்பு கோப்பையுடன் செல்வாரா மெஸ்ஸி!
எத்தனை எத்தனை சாதனை படைத்திருந்தாலும், பல தனித்துவமான பரிசுகளை தட்டிச்சென்றிருந்தாலும், கால்பந்தாட்டத்தின் தற்கால ஜாம்பவனாக பார்க்கப்படும் அர்ஜெண்டினா அணியின் லியோனல் மெஸ்ஸிக்கு கோப்பை என்ற கனவு இன்னும் கனவாகவே இருந்து வருகிறது. தனது கடைசி உலகக்கோப்பை இதுதான் என்று அறிவித்திருக்கும் லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பையை வென்று கையோடு கொண்டு செல்லத்தான் உலகத்திலிருக்கும் அனைத்து ரசிகர்களும், ஏன் எதிரணியான பிரான்ஸ் நாட்டு ரசிகர்களும் கூட அதை தான் விரும்புகின்றனர். அப்படி ஒரு வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, அவருடைய கனவுக்கோப்பை இந்த இறுதிக்கோப்பையிலாவது கிடைக்கவேண்டும் என்ற ஏக்கத்தில் உலகம் முழுக்க இருக்கும் மெஸ்ஸியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அர்ஜெண்டினா அணி பைனலுக்கு எப்படி இருக்கிறது!
அர்ஜென்டினா அணியைப் பொறுத்த வரையில், லீக் சுற்றில் சௌதி அரேபியாவிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்வி உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், அர்ஜென்டினா அடுத்தடுத்து வெற்றி கண்டு ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது, அர்ஜென்டினா அணி. முன்னதாக 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 0-1 என்ற
கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.
அப்போது அர்ஜென்டினாவின் கேப்டனாக இருந்த லயோனல் மெஸ்ஸி தான், தற்போதும் அணிக்கு தலைமையேற்றுள்ளார். இன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிதான் தனது கடைசி சர்வதேச போட்டி என்று மெஸ்ஸி அறிவித்துவிட்டார். எனவே, உலகக் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்ற மெஸ்ஸியின் விருப்பத்தை நிறைவேற்ற அர்ஜென்டினா வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.
35 வயதிலும் எதிரணியினரை மிரள வைக்கும் வகையில் விளையாடும் மெஸ்ஸி, ஜூலியன் ஆல்வரெஸ், பெர்னாண்டஸ், டி பால், மொலினா போன்ற இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டம், தடுப்புச்சுவராக செயல்படும் கோல்கீப்பர் மார்ட்டினெஸ்
போன்றோர் அர்ஜென்டினா அணியின் பலமாக இருக்கின்றனர்.
மெஸ்ஸி இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்ற குழப்பம்!
குரேஷியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது, மெஸ்ஸிக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் அவர் பங்கேற்பாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், முழு ஓய்வு எடுத்துவிட்டு மெஸ்ஸி இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஹீரோக்களாக மாறும் பிரான்ஸ் அணி வீரர்கள்!
நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி துடிப்பான இளம் வீரர்களுடன் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அர்ஜெண்டினாவில் நட்சத்திர வீரர் இருந்தாலும், பிரான்ஸ் அணியில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஹீரோக்கள் உருவாகின்றனர். அந்தளவிற்கு அனைத்து வீரர்களும் அற்புதமான பங்களிப்பை அளித்துவருகின்றனர்.
பிரான்ஸ் அணியை பொறுத்தவரையில், கிலியன் எம்பாப்பே, ஆலிவர் ஜிராடு, கிரிஸ்மேன், உஸ்மானே டெம்பெலே போன்ற வீரர்களின் வேகமான ஆட்டம் அர்ஜென்டினா தடுப்பு ஆட்டக்காரர்களுக்கு கடும் சவாலாகும். இளம் படையுடன் முழு பலத்துடன் களமிறங்க உள்ளது பிரான்ஸ் அணி.
ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரான்ஸ் வீரர்கள்!
பிரான்ஸ் வீரர்கள் சிலர் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும், அவர்கள் குணமாகிவிடுவார்கள் எனவும், பயிற்சியாளர் டெஸ்சேம்ப்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிக்கும் காத்திருக்கும் சாதனைகள்!
நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி, பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால், இத்தாலி மற்றும் பிரேசிலுக்குப் பின்னர் தொடர்ந்து 2ஆவது முறை சாம்பியன் சாம்பியன் பட்டம் வென்ற 3ஆவது அணி என்ற பெருமை பிரான்ஸூக்கு வந்து சேரும்.
இதேபோல் 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம்
வென்றிருக்கும் அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர தவம் கிடக்கிறது.
எந்த அணி கோப்பை வெல்லும்?
உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடப்போகும் அணி எது என சமூகவலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கணிப்புகளைப் பொறுத்த வரையில், இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருப்பதாக கால்பந்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
லீக் போட்டிகளில் ஒரே அணி, உலகக்கோப்பையில் வெவ்வேறு அணி! #மெஸ்ஸி-#எம்பாப்வே
இன்றைய போட்டியில் மற்றொரு சுவாரஸ்யமாக பார்க்கப்படுவது, பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் PARIS SAINT GERMAIN அணியில் ஒருங்கிணைந்து விளையாடி வரும் மெஸ்ஸியும், கிலியன் எம்பாப்பேவும் இன்று எதிரெதிர் துருவத்தில் விளையாடுகின்றனர்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடிப்பாரா மெஸ்ஸி?
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை கோல் அடித்ததே இல்லை என்னும் கருப்பு பெயரை இந்த உலகக்கோப்பை பைனலில் தகர்த்தெறிவாரா மெஸ்ஸி, என்ற கேள்வி ஒவ்வொரு புட்பால் வீரர்களுக்கும் அதிகமாகவே இருந்துவருகிறது.
சச்சினுக்கு ஒரு தோனி போல், மெஸ்ஸிக்கு யார் இருக்கப்போகிறார்கள்!
எத்தனை சாதனைகளை புரிந்திருந்தாலும் கோப்பை என்ற கனவு கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்காமலேயே இருந்தது. அப்படி ஒரு நிலையில், அவரை பார்த்து கிரிக்கெட்டிற்குள் வந்த தோனி என்ற இளைஞன் இறுதி உலகக்கோப்பை வாய்ப்பில் சச்சினை கோப்பையோடு அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடைசி வாய்ப்பில் இருக்கும் மெஸ்ஸிக்கு எந்த வீரர் பக்கபலமாக இருக்கபோகிறார், இல்லை அணியே பக்கபலமாக இருக்கப்போகிறதா என்னும் ஆர்வம் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
அரையிறுதிப்போட்டியில் கலக்கிய ஜூலியன் ஆல்வரெஸ், இறுதிப்போட்டியிலும் கலக்குவாரா இல்லை பெர்னாண்டஸ், டி பால், மொலினா போன்ற மற்றவீரர்கள் கலக்குவார்களா இல்லை இறுதிப்போட்டியில் கோலையே அடித்ததில்லை என்பதை உடைத்து மெஸ்ஸி தனது சிறப்பான முத்திரையை பதிப்பாரா என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இறுதிப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3UR5EBfஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஹீரோக்களாக மாறிவரும் பிரான்ஸ் அணி வீரர்களுக்கும், இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோலையே அடித்ததில்லை என்கிற ஜாம்பவான் மெஸ்ஸிக்கும் இடையேயான இந்த உலகக்கோப்பை போட்டி கடும் சவால்கள் நிறைந்த ஒன்றாகவும், சுவாரசியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கப்போகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்