திருப்பூர்: அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு இன்று மாலை நடந்தது.
அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
https://ift.tt/5ijtVp1திருப்பூர்: அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு இன்று மாலை நடந்தது.
அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்