Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தொகுப்பாளரின் `நன்றி கேப்டன்’ வாழ்த்துக்கு கண்ணீருடன் மெஸ்ஸி அளித்த உணர்வுபூர்வ பதில்!

“அர்ஜெண்டினா மக்களின் அன்புக்காகவும், கருணைக்காகவும் மற்ற அணிகளை விட நாங்களே இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறோம்” என்று மக்கள் தங்களின் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளனர் என்பது பற்றி பேசியுள்ளார் மெஸ்ஸி. கண்ணீர் தழும்ப மெஸ்ஸி பேசும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்று அபாரமான ஆட்டத்தால் வென்றது அர்ஜெண்டினா அணி. அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அர்ஜெண்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம், அர்ஜெண்டினா கால்பந்து தொகுப்பாளரான சோபியா மார்டினெஸ், ஒரு ரசிகையாகவும் ஒட்டுமொத்த அர்ஜெண்டினா மக்களின் சார்பாகவும் பேசுவதாக, ஒரு அற்புதமான உரையாடலை நிகழ்த்தினார். அதற்கு உணர்ச்சிவசப்பட்ட லியோனல் மெஸ்ஸி, கண்ணீரின் விளிம்பில் இருந்தவாறு பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, ட்விட்டரில் வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த முழு நேர்காணலின் YouTube கிளிப் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

image

அந்த வீடியோ காட்சியில் உரையாடலை நிகழ்த்திய சோபியா மார்டினெஸ், “நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தற்போது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரவிருக்கிறது என்பதால் அதற்கு முன் இதை நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். அது என்னவெனில், இறுதிப்போட்டியில் முடிவுகள் எதுவாக இருந்தாலும், கோப்பையை கடந்து உங்களிடமிருந்து யாராலும் எடுக்க முடியாத ஒன்று இருக்கிறது. அதை நான் தீவிரமாக நம்புகிறேன். அது மக்கள் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு. இப்போதுகூட அர்ஜெண்டினாவில், மெஸ்ஸியின் கால்பந்து அணி சட்டையை வைத்திராத ஒரு குழந்தை கூட இல்லை. அச்சட்டை போலியானதா, விற்பனைக்கானதா அல்லது அவர்கள் நிஜ விளையாட்டு வீரரா என்பது முக்கியமல்ல. அது அவர்களை சென்றடைந்திருக்கிறது என்பதே விஷயம்.

image

உண்மையாகவே, நீங்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரது வாழ்க்கையிலும் முத்திரையை பதித்துள்ளீர்கள். என்னை பொருத்தவரை, அது நீங்கள் எந்த உலகக் கோப்பையையும் வெல்வதற்கும் அப்பாற்பட்டதென நினைக்கிறேன். உங்களிடமிருந்து அதை யாரும் எடுக்க முடியாது, நீங்கள் நிறைய பேருக்கு இவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டு வந்ததற்காக எனது நன்றி” என்று கூறினார்.

image

மேலும், “உலகக் கோப்பையை வெல்வதை விட இது மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த மனம் உங்களிடம் ஏற்கனவே உள்ளது! அப்படியான எங்கள் கேப்டனுக்கு நன்றி" என்று பேசினார் தொகுப்பாளர் மார்டினெஸ்.

இதற்கு கண்ணீர் தழும்ப பதிலளித்துள்ளார் லியோனல் மெஸ்ஸி. அவர் பேசுகையில் “மிக்க நன்றி, உண்மை என்னவென்றால் என்னால் இவ்விஷயங்களை உணர முடிகிறது. மக்களின் அளவிடமுடியாத அன்புக்காக, நாங்கள் எங்களின் மொத்த நேரத்தையும் கொடுத்து வாழ்கிறோம். இந்த உலகக்கோப்பையில் மற்ற எந்த அணிகளை விடவும் நாங்களே கோப்பையை வெல்ல அதிகம் விரும்புகிறோம் என சொல்லலாம். கடந்த 5 போட்டிகளை போன்றே இறுதிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

image

முதல் போட்டியின் ஒரு மோசமான தோல்வியிலிருந்து மீண்டு வந்த நாங்கள், தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள், வெற்றி அல்லது தோல்விக்கு மட்டுமே மதிப்பு கொடுக்காமல், உழைப்புக்கும் அதிக மதிப்பு தருவதை நான் உணர்கிறேன். நிச்சயம் இறுதிப்போட்டியில் எங்களுடைய சிறந்த திறனை கொடுக்கப்போம்; சிறந்த ஆட்டத்தை கொடுக்க முயல்வோம்” என்று தெரிவித்தார்.

இப்பேட்டியை கண்ட மெஸ்ஸி ரசிகர் பட்டாளம், அவருக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளர் மார்டினெஸ், உரையாடலின் சிறிய வீடியோ பதிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், `நீங்கள் 2026 உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாட வேண்டும்’ என கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். மேலும் “நன்றி கேப்டன். இதையே நான் உங்களுக்கு சொல்ல விரும்பினேன்” என்றும் இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

இந்தப் பதிவும் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/TQfIpLP

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்